செய்திகள்

டி20 உலகக் கோப்பை: பும்ரா விலகினால் அடுத்து என்ன நடக்கும்?

ஆறு மாத காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என பிசிசிஐயைச் சேர்ந்த...

DIN

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காயத்தின் தீவிரத்தன்மை குறித்து அறிய பெங்களூருக்குச் சென்றுள்ளார் பும்ரா. என்.சி.ஏ.வில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று அதன் முடிவுகள் வந்த பிறகு பும்ராவின் நிலை பற்றி பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாத காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என பிசிசிஐயைச் சேர்ந்த ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அளித்துள்ளார். காயம் காரணமாக ஜடேஜா விலகிய நிலையில் அடுத்ததாக பும்ராவும் விலகவுள்ளதாகச் செய்தி வெளியாகியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என ரசிகர்கள் கருதுகிறார்கள். 

பும்ரா விலகினால் அடுத்து நடக்கும்?

இந்திய அணியின் 11 பேரில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். பும்ரா விலகியதால் ஷமி அல்லது தீபக் சஹார் ஆகிய இருவரில் ஒருவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள். தற்போது இருவரும் மாற்று வீரர்களாக உள்ளார்கள். பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் 15 வரை ஐசிசியின் அனுமதியின்றி அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் வேலு திறந்து வைத்தாா்

குடியரசு தினம்: ரூ.1.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆண்டு வருவாய் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT