FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைச் சமன் செய்த நியூசிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

2-வது ஒருநாள் ஆட்டத்தை டி/எல் முறையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

Updated On : 20 ஆகஸ்ட் 2022, 4:24 pm IST
டேரில் மிட்செல்
பகிர்:


மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை டி/எல் முறையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 48.2 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. ஃபின் ஆலன் 96 ரன்களும் டேரில் மிட்செல் 41 ரன்களும் எடுத்தார்கள். கெவின் சின்க்ளர் 4 விக்கெட்டுகளும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

மழை காரணமாக மே.இ. தீவுகள் அணிக்கு 41 ஓவர்களில் 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேல் வரிசை மற்று நடுவரிசை பேட்டர்கள் மோசமாக விளையாடியதால் முதல் 6 விக்கெட்டுகளை 27 ரன்களுக்கு இழந்தது மே.இ. தீவுகள் அணி. யானிக் 52, அல்ஸாரி ஜோசப் 49 ரன்களும் எடுத்தார்கள். மே.இ. தீவுகள் அணி 35.3 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. டிம் செளதி 4 விக்கெட்டுகளும் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்த வெற்றியால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments