FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு மே.இ. தீவுகள் அணி நேரடியாகத் தகுதி பெறுமா?

2023 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

Updated On : 24 ஆகஸ்ட் 2022, 1:27 pm IST
பகிர்:

2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துள்ளது என்றே கூறலாம். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்றதுடன் ஒருநாள் தொடரையும் சமீபத்தில் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. இந்தத் தோல்வியால் மே.இ. தீவுகள் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியின் சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 நாடுகள் மட்டுமே நேரடியாகத் தகுதி பெறும். சூப்பர் லீக் சுற்றில் மீதமுள்ள 5 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடினால் மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். தகுதிச்சுற்றில் இந்த 5 அணிகள் உள்பட 10 அணிகள் பங்கேற்கும். அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும். 2023 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

Advertisement

Advertisement

சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் மே.இ. தீவுகள் அணி, 88 புள்ளிகளைக் கொண்டுள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இரு புள்ளிகளை இழந்தது. புள்ளிகள் பட்டியல் அந்த அணி தற்போது 7-ம் இடத்தில் உள்ளது. அதன் கீழே ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. 

மே.இ. தீவுகள் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு விளையாட வேண்டிய 24 ஒருநாள் ஆட்டங்களையும் விளையாடி முடித்து விட்டது. இதனால் அந்த அணியால் இனிமேல் கூடுதலாக எந்தப் புள்ளியையும் பெற முடியாது. ஆனால் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இன்னும் பல ஆட்டங்களில் விளையாடவுள்ளன. ஆஸ்திரேலியா 12, இலங்கை 18, தென்னாப்பிரிக்கா 13 ஆட்டங்களில் இதுவரை விளையாடியுள்ளன. இதனால் இந்த அணிகள், புள்ளிகள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளைத் தாண்டிச் செல்லும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. 

இந்தச் சூழலில் ஜிம்பாப்வேயில் அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றில் போட்டியில் விளையாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது மே.இ. தீவுகள் அணி. 1975, 1979 உலகக் கோப்பைப் போட்டிகளில் சாம்பியன் ஆன மே.இ. தீவுகள் அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments