முகப்பு
செய்திகள்

சிலர் ஓய்வு பெறுவார்கள்: கவாஸ்கர் கணிப்பு!

ஐபிஎல் கோப்பையை வென்று காண்பித்துள்ளார் பாண்டியா. எனவே...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து சில வீரர்கள் ஓய்வு பெறலாம் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 63, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஞாயிறன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுநீல் கவாஸ்கர் கூறியதாவது:

Advertisement

முதல்முறையாக கேப்டன் பதவி வழங்கப்பட்டபோதே ஐபிஎல் கோப்பையை வென்று காண்பித்துள்ளார் பாண்டியா. எனவே (இந்திய டி20 அணியின்) அடுத்த கேப்டனாக பாண்டியாவைக் குறித்து வைத்திருப்பார்கள். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா இருப்பார். கூடவே சிலர் ஓய்வும் பெறுவார்கள். என்ன நடக்கும் எனத் தெரியாது. அதைப் பற்றி வீரர்கள் தீவிரமாகச் சிந்திப்பார்கள். பல வீரர்கள் 30களின் மத்தியில் உள்ளார்கள். இந்திய அணியில் அவர்களுக்கான இடம் பற்றி மறுபரிசீலனை செய்வார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments