ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமிக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமிக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது ஆஸ்திரேலிய அணி. டி20 தொடர் செப்டம்பர் 20-ல் தொடங்கி 25-ல் முடிவடைகிறது. மொஹலி, நாகபுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சஹார்,முகமது ஷமி.
Advertisement
Advertisement
ஷமிக்கு கரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஷமிக்கு பதிலாக மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.