செய்திகள்

அனைத்திலும் நெ.1: இந்திய கிரிக்கெட் அணி சாதனை!

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

DIN

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் நெ.1 அணியாக இந்திய அணி உள்ளது. ரோஹித் சர்மா, பாண்டியா, பிசிசிஐ என இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் செய்தியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT