ஜூன் 28-இல் தொடங்கும் துலீப் கோப்பை கிரிக்கெட்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 59-ஆவது சீசன், வரும் 28-ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 59-ஆவது சீசன், வரும் 28-ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
முதல் நாளில் மத்திய - கிழக்கு மண்டலங்களும், வடக்கு - வடகிழக்கு மண்டலங்களும் தங்களிடையேயான மோதலை தொடங்குகின்றன. இந்த இரு ஆட்டங்களுமே காலிறுதியாக கணக்கில் கொள்ளப்படும்.
முந்தைய சீசன் சாம்பியனான மேற்கு மண்டலம், ரன்னா் அப்-ஆக வந்த தெற்கு மண்டலம் ஆகியவை நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
Advertisement
Advertisement
மேற்கு மண்டல அணிக்கு பிரியங்க் பஞ்சல், தெற்கு மண்டலத்துக்கு ஹனுமா விஹாரி, கிழக்கு மண்டலத்துக்கு அபிமன்யு ஈஸ்வரன், வடக்கு மண்டலத்துக்கு மன்தீப் சிங், மத்திய மண்டலத்துக்கு ஷிவம் மாவி, வடகிழக்கு மண்டலத்துக்கு ராங்சென் ஜோனதன் கேப்டனாக உள்ளனா்.