FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறப்பு ஒலிம்பிக்ஸ்: தங்கம் வென்றார் சென்னை சிறுமி பூஜா

ஜெர்மனியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் பிரிவில் சென்னை சிறுமி பூஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார

2 பிப்ரவரி 2024, 5:17 pm IST
தங்கம் வென்ற பூஜா
பகிர்:


ஜெர்மனியில் நடைபெற்ற சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் பிரிவில் சென்னை சிறுமி பூஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டிப் போட்டிகள் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 198 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 190 நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பூஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

'டவுன் சின்ட்ரோம் டிரிசோமி 21' என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி பூஜா, ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்று, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

சென்னையில் உள்ள சிறுப்பு குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தில் ஒன்பது வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் பூஜா, தங்கப் பதக்கம் வென்றிருப்பது இந்திய அணியினருக்கு பெருமை சேர்த்திருப்பதோடு, மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நீச்சல் போட்டியில் பங்கேற்க, சிறுமி பூஜா, இரண்டு இளைஞர்கள் என மூன்று பேர் கொண்ட அணியினர் சென்றிருந்தனர். பூஜா தங்கப் பதக்கம் வென்ற நிலையில், 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரெஸ்ட் ஸ்டிரோக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட 22 வயது தினேஷ் வெள்ளிப் பதக்கமும் 18 வயது அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர் 4x25 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

சிறப்பு ஒலிம்பிக் என்பது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். சிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments