முகப்பு
செய்திகள்

அஸ்வின், ஜடேஜாவுக்குத் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது ஏன்?

டெஸ்ட் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளும் 86 ரன்களும் ஜடேஜா 22 விக்கெட்டுகளும் 135 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.

ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வாகியுள்ளார். தொடர் நாயகன் விருது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளும் 86 ரன்களும் ஜடேஜா 22 விக்கெட்டுகளும் 135 ரன்களும் எடுத்துள்ளார்கள். அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் பேட்டிங்கில் ஜடேஜா ஓர் அரை சதமெடுத்துள்ளார். அஸ்வின் அதிகபட்சமாக தில்லி டெஸ்டில் 37 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இருவரும் இந்திய அணிக்கு முடிந்தளவு உதவியிருக்கிறார்கள். 

டெஸ்ட் தொடரில் இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஆட்டத்திறனை நன்கு வெளிப்படுத்தியதால் இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசளிப்பு விழாவில் ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.  

முழு கட்டுரையைப் படிக்க →