FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. 

Updated On : 13 பிப்ரவரி 2023, 5:58 am IST
பகிர்:

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. 

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுக்க, இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எட்டி வென்றது. இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகி ஆனார். 

முன்னதாக, ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில், காயம் கண்டுள்ள ஸ்மிருதி மந்தனாவுக்குப் பதிலாக ஹர்லீன் தியோல் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. 
தொடக்க பார்ட்னர்ஷிப்பில் ஜவெய்ரா கான் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்து 2-ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் பிஸ்மா மரூஃப் நிலைத்து நின்று ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். மறுபுறம் முனீபா அலி 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் சேர்த்து வெளியேற, நிதா தார் "டக் அவுட்' ஆனார். சிட்ரா அமீன் 11 ரன்கள் அடித்து வீழ்ந்தார். 

Advertisement

Advertisement

ஓவர்கள் முடிவில் பிஸ்மா 7 பவுண்டரிகளுடன் 68, ஆயிஷா நஸீம் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்து அசத்தியது. இந்திய பெüலிங்கில் ராதா யாதவ் 2, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் 150 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை யஸ்திகா பாட்டியா 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சேர்க்க, உடன் வந்த ஷஃபாலி வர்மா 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டாக கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53, ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழி நடத்தினர். பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சந்து 2, சாதிக் இக்பால் 1 விக்கெட் கைப்பற்றினர். 
இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை 15-ஆம் தேதி சந்திக்கிறது. 

இதர ஆட்டங்கள்: இதனிடையே, இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments