FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டபிள்யூபிஎல்: லக்னெள அணியின் கேப்டன் அறிவிப்பு

டபிள்யூபிஎல் போட்டியில் உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.

7 பிப்ரவரி 2024, 12:05 pm IST
பகிர்:

டபிள்யூபிஎல் போட்டியில் உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருடம் முதல் தொடங்கும் மகளிருக்கான இந்திய டி20 லீக் போட்டியான டபிள்யூபிஎல்-லில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன.  டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யூபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

Advertisement

Advertisement

டபிள்யூபிஎல் போட்டிக்காக வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது. 

இந்நிலையில் உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா அதே அணியில் இருந்தபோதும் அலிஸா ஹீலி கேப்டனாகத் தேர்வாகியுள்ளார்.

மேக் லேனிங் விளையாடாதபோது, ஆஸி. அணியின் கேப்டனாக அலிஸா ஹீலி செயல்பட்டுள்ளார். டபிள்யூபிபிஎல் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டனாகவும் ஹீலி இருந்துள்ளார். ஒருநாள், டி20 என 6 உலகக் கோப்பைகளை ஹீலி வென்றுள்ளார். சர்வதேச டி20யில் 2,446 ரன்கள் எடுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments