ஜொனிட்டா காந்தியுடன் நடிக்கும் விராட் கோலி!
துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால்...
பிரபல பாடகர்கள் டிவைன், ஜொனிட்டா காந்தியுடன் இணைந்து தனிப்பாடல் ஒன்றின் விடியோவில் நடித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
நயா ஷெர் என்கிற ராப் பாடல் வகைமையில் உருவாகியுள்ள இப்பாடல் குறித்து விராட் கோலி கூறியதாவது:
ஆடுகளத்திலும் வெளியேயும் துணிச்சலான முடிவுகளை நான் எடுப்பேன். அதுதான் என்னைச் செதுக்கியுள்ளது. துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது. இந்தப் பாடலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது நல்ல அனுபவம். அந்தப் பாடலைப் படமாக்கும்போது நான் நானாக இருந்தேன். புது கவிஞர்களுக்கு... இது உங்களுக்கான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.