நியூசி. ஒருநாள் தொடர்: ஷ்ரேயஸ் ஐயர் விலகல்
ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்திய ஒருநாள் அணியின் முக்கிய பேட்டர்களில் ஒருவரான ஷ்ரேயஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய ஒருநாள் அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 28, 28, 38 என ஓரளவு சுமாராகவே விளையாடினார் ஷ்ரேயஸ் ஐயர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.