யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20: இந்தியா சாம்பியன்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிக்க- ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்
Advertisement
Advertisement
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கோங்காடி வி த்ரிஷா 24, சௌம்யா மணீஷ் திவாரி 24, ஷபாலி வர்மா 15 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே இந்தியா அணி சாம்பியன் ஆனது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.