304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றி!
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான குவாலிஃபையா் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் அமெரிக்காவிற்கு எதிரான இன்றையப் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 408 ரன்கள் எடுத்தது. முதன்முறையாக 400க்கு மேலாக அடித்தது ஜிம்பாப்வே அணி. இதில் தொடக்க வீரர் ஜே கும்ப்ளே 78 ரன்களும் எடுத்த ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய கேப்டன் ஷான் வில்லியம்ஸ் 174 ரன்கள் எடுத்து அசத்தினார். சிக்கந்தர் ராஸா 27 பந்துகளில் 48 ரன்களும் ரியான் ப்ரூள் 16 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதையும் படிக்க: மகளிர் ஆஷஸ்: கார்டனர் 8 விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
Advertisement
Advertisement
அடுத்து ஆடிய யுஎஸ்ஏ அணி 25.1 ஓவரில் 104 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. 3 ரன்னவுட்கள் செய்து அசத்தினர் ஜிம்பாப்வே அணியினர். சிக்கந்தர் ராஸா, ரிச்சர்ட் கராவா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிக்க: நாங்கள் முட்டாள்கள் இல்லை; இதனால்தான் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யவில்லை: பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
இந்த குவாலிஃபையா் லீக் போட்டியில் ஜிம்பாப்வே 4 போட்டிகளிலும் வென்று அடுத்த சுறுக்கு தகுதி பெற்றுள்ளது. யுஎஸ்ஏ நான்கிலும் தோற்று வெளியேறியுள்ளது.
மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் 2வது அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பெறும் வெற்றியாகும். முதலிடத்தில் இந்திய அணி (317 ரன்கள்) உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.