வில்லியம்சன் கம்பேக்: வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!
உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
உலகக் கோப்பை லீக் போட்டியின் 35வது ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசி. அணிகள் மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். நியூசி. பாக். இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி முக்கியமானது. வாழவா சாவா என்ற நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் போட்டி நடைபெற்று வருகின்றன.
நியூசிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 66/0 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 28, டெவான் கான்வே 34 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
நியூசி. அணியில் 2 மாற்றங்கள்: கேன் வில்லியம்சன், இஷ் சௌதி
பாக். அணியில் ஒரு மாற்றம்: ஹசன் அலி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.