செய்திகள்

இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலா? புள்ளிவிவரம் கூறுவதென்ன?

இலங்கைக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் பலரும் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறித்து...

DIN

இலங்கைக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் பலரும் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சு தடுமாற்றத்தைக் கொடுக்கிறதா என்ற விமர்சனத்தை எழுப்பியது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையில் பரபரப்பாக சென்ற முதல் போட்டி சமனில் முடிந்தது.

அதன்பின், நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி அசத்தியது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி இருதரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி.

3 போட்டிகளில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்கள்

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முதல் போட்டி

சரித் அசலங்கா - 3 விக்கெட்டுகள்

வனிந்து ஹசரங்கா - 3 விக்கெட்டுகள்

துனித் வெல்லாலகே - 2 விக்கெட்டுகள்

அகிலா தனஞ்ஜெயா - ஒரு விக்கெட்

இரண்டாவது போட்டி

ஜெஃப்ரி வாண்டர்சே - 6 விக்கெட்டுகள்

சரித் அசலங்கா - 3 விக்கெட்டுகள்

மூன்றாவது போட்டி

துனித் வெல்லாலகே - 5 விக்கெட்டுகள்

மஹீஷ் தீக்‌ஷனா - 2 விக்கெட்டுகள்

ஜெஃப்ரி வாண்டர்சே - 2 விக்கெட்டுகள்

இந்தியாவுக்கு எதிராக அதிகமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்

இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே, மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஒன்றுக்கு அதிமான முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு கொழும்புவில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி ஒன்றில் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி அதிக விக்கெட்டுகளை இழந்த தருணங்கள்

10 விக்கெட்டுகள் - கொழும்பு, 2023

9 விக்கெட்டுகள் - கொழும்பு, 1997

9 விக்கெட்டுகள் - கொழும்பு, 2024

9 விக்கெட்டுகள் - கொழும்பு, 2024

9 விக்கெட்டுகள் - கொழும்பு, 2024

மேற்கூறிய 5 போட்டிகளிலும் இலங்கையின் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT