FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 13 ஜூலை 2024, 7:08 pm IST
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இங்கிலாந்து அணி விவரம் (ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுக்குப் பிறகு)

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி ப்ரூக், ஸாக் கிராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லான் பெனிங்டான், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட்.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 18 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments