தோனியின் புதிய விளம்பரப் புகைப்படங்கள். படங்கள்: முகநூல் / தோனி
செய்திகள்

தோனியின் முகநூல் பதிவுக்கு காரணம் இதுதான்! ரசிகர்கள் ஏமாற்றம்!

சமீபத்திய முகநூல் பதிவிற்கான காரணத்தை விளக்கும் விடியோவினை எம்.எஸ்.தோனி பதிவிட்டுள்ளார்.

DIN

சமீபத்திய முகநூல் பதிவிற்கான காரணத்தை விளக்கும் விடியோவினை எம்.எஸ்.தோனி பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது. 42 வயதாகும் தோனி இந்த முறை ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் பக்லருக்கும் இருக்கிறது.

கடந்தாண்டு முட்டி வலியால் பாதிக்கப்பட்ட தோனி அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருக்கிறார்.

சமீபத்திய எம்.எஸ்.தோனியின் சூசகமான முகநூல் பதிவால், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்தன. “புதிய சீசன் மற்றும் புதிய 'ரோல்'க்காக காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்!” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்திருந்தார்.

இந்நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜியோவிற்கான விளம்பரம் ஒன்றில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை ஜியோவில் இலவசமாக பார்க்கலாம்

விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள தோனியின் இந்த யுக்தியை முன்னமே சில ரசிகர்கள் கணித்தாலும் சில ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT