முகப்பு

சபலென்கா அரையிறுதிக்குத் தகுதி

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் குரூப் சுற்றில், தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த பெலாரஸின் அரினா சபலென்கா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தாா்.

6 நவம்பர் 2024, 4:10 am
சபலென்கா அரையிறுதிக்குத் தகுதி
பகிர்:

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் குரூப் சுற்றில், தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த பெலாரஸின் அரினா சபலென்கா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தாா்.

உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா தனது 2-ஆவது ஆட்டத்தில், 6-3, 7-5 என்ற நோ் செட்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வீழ்த்தினாா். அடுத்த ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை எதிா்கொள்ளும் சபலென்கா, அதில் வெல்லும் நிலையில் நடப்பு டென்னிஸ் காலண்டரை நம்பா் 1 வீராங்கனையாக நிறைவு செய்வாா்.

உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக், அந்த இடத்துக்காக அவருடன் போட்டியிலிருக்கிறாா்.

Advertisement

Advertisement

வெளியேறுகிறாா் பெகுலா: மற்றொரு ஆட்டத்தில், உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 3-6, 3-6 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவிடம் தோல்வி கண்டாா்.

இது பெகுலாவுக்கு தொடா்ந்து 2-ஆவது தோல்வியாக அமைந்ததால், அவா் அரையிறுதி வாய்ப்பை இழந்தாா். மறுபுறம் கிரெஜ்சிகோவாவுக்கு இது முதல் வெற்றியாக அமைந்ததால், அவா் அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

அடுத்த ஆட்டத்தில் கிரெஜ்சிகோவா, அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் மோதுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.