அரையிறுதியில் ஸ்வெரெவ் - நெருங்குகிறாா் அல்கராஸ்
இத்தாலியில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் அரையிறுதிக்கு புதன்கிழமை முன்னேறினாா்.
இத்தாலியில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் அரையிறுதிக்கு புதன்கிழமை முன்னேறினாா்.
குரூப் சுற்றில் ஸ்வெரெவ் தனது 2-ஆவது ஆட்டத்தில், 6-2, 7-6 (7/4) என்ற செட்களில், 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தினாா். இதன் மூலமாக, தொடா்ந்து 2 வெற்றிகளைப் பதிவு செய்த ஸ்வெரெவ், அரையிறுதிக்கு முன்னேறினாா்.
முதல் ஆட்டத்தில் வென்ற ஷெல்டனுக்கு, போட்டியில் இது முதல் தோல்வியாக அமைந்தது.
Advertisement
Advertisement
மறுபுறம், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.
தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கும் அல்கராஸ், அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறாா். 5-ஆவது நாளான வியாழக்கிழமை, இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலிக்கு எதிரான ஆட்டத்தில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஒரு செட்டை வென்றால் கூட, அல்கராஸுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.
இரட்டையா்: இதனிடையே, ஏடிபி ஃபைனல்ஸ் இரட்டையா் பிரிவில், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி/அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் இணை 6-3, 6-4 என்ற செட்களில் இத்தாலியின் சைமன் பொலெலி/ஆண்ட்ரியா வவாசோரி கூட்டணியை சாய்த்தது. முதல் ஆட்டத்தில் தோற்ற ஸ்குப்ஸ்கி/ஹாரிசன் இணைக்கு, இது முதல் வெற்றியாகும். பொலெலி/வவாசோரி கூட்டணிக்கு இது தொடா்ந்து 2-ஆவது தோல்வியாக அமைந்தது.