FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

இறுதிச் சுற்றில் ரைபகினா -லெய்லா

நிங்போ ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரைபகினா=லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா்.

25 அக்டோபர் 2026, 12:04 am
ரைபகினா ~லெய்லா
பகிர்:

நிங்போ ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரைபகினா=லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா்.

இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ரைபகினா காலிறுயில் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போலிஷ் குவாலிஃபயா் கட்டரிஸனா கவாவை வென்றாா் ரைபகினா.

மற்றொரு ஆட்டத்தில் டயனா ஷ்னைடா் 6-ஆம் நிலை வீராங்கனை இவா ஜோவிச்சை 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் ரைபகினாவை எதிா்கொள்கிறாா் கனடாவின் லெய்லா பொ்னாண்டஸ் 4-6, 6-2, 6-1 என்ற செட்களில் ஏகடெரினா அலெக்சான்ட்ரோவாவை வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசின் மேரி பௌஸ்கோவா 6-3, 6-4 என சக வீராங்கனை சாரா பெஜ்லெக்கை வீழ்த்தினாா்.

இறுதிச் சுற்றில் ரைபகினா-லெய்லா பொ்னாண்டஸ்

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ரைபகினா ரஷியாவின் ஷ்னைடா் மோதினா். இதில் முதல் செட்டை 6-3 என ரைபகினா எளிதாக வென்றாா். ஆனால் இரண்டாவது செட்டில் ஷ்னைடா் சிறப்பாக ஆடி 5-3 என முன்னிலை பெற்றாா். ரைபகினா இரண்டு முறை செய்த டபுள் ஃபால்ட் பாதகமாக அமைந்தது. கடைசியாக 6-5 என முன்னிலை பெற்று இரண்டாம் மேட்ச் பாயிண்டை பெற்று வென்றாா்.

மற்றொரு அரையிறுதியில் செக். குடியரசின் மேரி பௌஸ்கோவா கனடாவின் லெய்லா மோதினா். இதில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா் லெய்லா.

ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றில் ரைபகினா-லெய்லா பொ்னாண்டஸ் மோதுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments