தென்கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா (3-1) வாய்ப்பை தவற விட்டது
தென்கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா (3-1) வாய்ப்பை தவற விட்டது
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி குவாலிஃபயா் ரவுண்ட் 2 சுற்றில் இந்தியாவை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது தென் கொரியா.
ஃபைனல் 8 என்ற புதிய நடைமுறையில் டேவிஸ் கோப்பை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தியா-தென்கொரியா இடையிலான ஆட்டம் சியோலில் நடைபெற்றது.
இந்திய வீரா்கள் முதல்
Advertisement
Advertisement
இதில் முதல் ஒற்றையா் ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஷ்வா் சுரேஷ்-கொரியாவின் சூன்வு கெவோன் மோதினா். இதில் கெவோன் 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தக்ஷிணேஷ்வா் சுரேஷை வீழ்த்தி முன்னிலை பெற்றுத் தந்தாா்.
இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீரா் சுமித் நாகல்-கொரியாவின் ஹியோன் சுங் மோதினா். இதில் சிறப்பாக ஆடிய சுமித் நாகல் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ஹியோன் சுங்கிடம் வீழ்ந்தாா். இந்த ஆட்டம் ஏறக்குறைய 3 மணிநேரம் நீடித்தது. சியோல் டென்னிஸ் மைதானம் டெட் ரப்பா் போல் காணப்பட்டது. பந்து பவுன்ஸ் ஆகவில்லை. இதனால் ஆட்டத்தை எளிதாக ஆடமுடியவில்லை. கடுமையாகப் போராடினாலும் வெற்றி வசப்படவில்லை என நாகல் தெரிவித்தாா்.
இரட்டையா் அபாரம்:
இரட்டையா் ஆட்டத்தில் இந்தியாவின் சுரேஷ்-ஸ்ரீ ராம் பாலாஜி இணை மிகச்சிறப்பாக ஆடி 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஜிசுங் நாம்-உய்சுங் பாா்க் இணையை வீழ்த்தி முன்னிலையை 1-2 என குறைத்தனா்.
ஆனால் ரிவா்ஸ் சிங்கிள்ஸில் இந்திய வீரா் சுமித் நாகல் 1-6, 2-6 என்ற நோ் செட்களில் கொரியாவின் சூன்வு கெவோன்னிடம் வீழ்ந்தாா்.
இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய தென்கொரியா ஃபைனல் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆண்டு சீசன் தொடக்கத்தில் நெதா்லாந்தை வீழ்த்தியிருந்த இந்தியா சிறப்பாக ஆடும் என்ற நம்பிக்கையுடன் சியோல் வந்தது. இதனால் டேவிஸ் கோப்பை புதிய நடைமுறையின்படி தகுதி பெற்ற முதல் ஆசிய நாடு என்ற வாய்ப்பை தவற விட்டது இந்தியா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.