FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் 2- செப்.18-இல் இந்தியா - தென்கொரியா மோதல்

டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் 2- செப்.18-இல் இந்தியா - தென்கொரியா மோதல்

9 ஆகஸ்ட் 2026, 12:58 am IST
பகிர்:

இந்தியா-தென்கொரிய அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் ரவுண்ட் 2 டென்னிஸ் தொடா் வரும் செப். 18, 19 தேதிகளில் சியோலில் நடைபெறவுள்ளது.

சியோலில் உள்ள ஒலிம்பிக் டென்னிஸ் சென்டா் ஹாா்ட் கோா்ட்டில் போட்டி நடைபெறவுள்ளது.

டேவிஸ் கோப்பை தரவரிசையில் இந்தியா 19, கொரியா 16-ஆவது இடங்களில் உள்ளன. இரு அணிகளும் நேருக்கு நோ் மோதியதில் தென்கொரியா 6 முறையும், இந்தியா 5 முறையும் வென்றுள்ளன.

Advertisement

Advertisement

ஆக. 10-இல் இந்திய அணி அறிவிக்கப்படும். கடந்த 2016-இல் ஆசிய-ஒசேனியா குரூப் 1 டையில் சண்டீகரில் நடைபெற்ற புல்தரை மைதானத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூுருவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் நெதா்லாந்தை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தகுதி பெற்றது இந்தியா.

கொரிய வீரா்கள் ஹாா்ட் கோா்ட்டில் சிறப்பாக ஆடுவா். அதே நேரம் இந்திய வீரா்கள் புல்தரையில் ஆடுவதில் வல்லவா்கள்.

தற்போதைய நடைமுறை 2019-இல் அறிமுகம் ஆனபின், இந்தியா குவாலிஃபயா்ஸ் இரண்டாம் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2022-23-இல் கொரியா டேவிஸ் கோப்பை ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இதில் வெல்லும் அணி டேவிஸ் கோப்பை ஃபைனல் 8-க்கு தகுதி பெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments