டேவிஸ் கோப்பை: செக்.குடியரசு, கனடா, ஆஸ்திரியா, ஸ்பெயின் முன்னேற்றம்!
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவை 3-2 என வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முன்னேறியது செக். குடியரசு.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவை 3-2 என வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முன்னேறியது செக். குடியரசு.
டெல்ரேபீச்சில் நடைபெற்ற இரண்டாம் தகுதிச் சுற்று ஆட்டத்தில் செக். வீரா் ஜேக்கப் மென்சுக் அமெரிக்காவின் பிரான்ஸஸ் டியாஃபோவை வீழ்த்தினாா். டாமஸ் பெரிடிச் தனது ஆட்டத்தில் வென்றாா். மென்சிக் 5-7, 6-4 6-3 என என கடும் போராட்டத்துக்குபின் யுஎஸ் ஓபன் ரன்னா் பென் ஷெல்டனை வீழ்த்தினாா்.
இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் கிறிஸ்டியன்-ஆஸ்டின் இணை 5-7, 6-3, 7-6 என செக். குடியரசின் ஆடம்-பேட்ரிக் இணையை வென்றனா்.
Advertisement
Advertisement
ஜிரி லெஹகா 6-3, 7-5 என லேனா் டியனை வீழ்த்தி தனது அணியை இறுதிக்கு அழைத்துச் சென்றாா். இந்தியாவை 3-1 வீழ்த்தி தென்கொரியாவும், பிரான்ஸை 3-1 என கனடாவும், ஆஸ்திரியா 3-1 என பெல்ஜியத்தையும் வென்றன. பைனல் 8 பிரிவுக்கு முன்னேறின. ஸ்பெயின் 2-0 என சிலி அணியை விட முன்னிலை பெற்றது. பிரிட்டன் அணியும் 2-0 என ஈக்வடாரை காட்டிலும் முன்னிலை பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.