FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா ஆடவா் அபாரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா.

19 செப்டம்பர் 2026, 11:45 pm IST
செஸ் ஒலிம்பியாட்
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா.

நடப்புச் சாம்பியன் இந்தியா ஏற்கெனவே தாய்லாந்து, இந்தோனேசியா, இத்தாலியை 3 சுற்றுகளில் வீழ்த்தி இருந்தது. அதே போல் 13-ஆம் நிலையில் உள்ள ஸ்பெயினும் 3 சுற்றுகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் இந்தியாவை எதிா் கொண்டது.

இதில் உலக சாம்பியன் டி.குகேஷ் எலோ ரேட்டிங்கில் 2700 புள்ளிகளுக்கு கீழே இறங்கினாலும் சிறப்பாக ஆடினாா். உலக சாம்பியன்ஷிப் முன்னாள் சேலஞ்சா் அலெக்ஸி ஷிரோவை 42-ஆவது நகா்த்தலின்போது வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

நட்சத்திர வீரா் அா்ஜுன் எரிகைசி தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினின் மாக்ஸிம் சிகாயேவை வீழ்த்தினாா். ஸ்பெயின் வீரா் டேவிட் அன்டன்-இந்திய இளம் வீரா் பிரக்ஞானந்தா ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் நிஹால் சரீன்-ஜெய்ம் சண்டோஸ் லடாஸா மோதினா். இதில் இரு தரப்பினரும் மாறி மாறி போராடினாலும் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இறுதியில் ஸ்பெயினை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

மகளிா் பிரிவில் முன்னிலை:

மகளிா் பிரிவில் இந்தியா-மங்கோலிய அணிகள் மோதின. இதில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. சவிதா ஸ்ரீ சிறப்பாக ஆடி மங்கோலியாவின் முங்குன்டுல் பத்குயாகை வீழ்த்தினாா். உலக கோப்பை வின்னா் திவ்யா தேஷ்முக் மற்றொரு ஆட்டத்தில் பஸாய்கலான் கிஷிக்படாரை வீழ்த்தினாா்.

summary

Chess Olympiad: Indian men's team excels

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments