FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவில் 2027-இல் மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை!

மகளிருக்கான அறிமுக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி, 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை மும்பை மற்றும் வதோதராவில் நடைபெறவுள்ளது.

3 செப்டம்பர் 2026, 2:33 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மகளிருக்கான அறிமுக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி, 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை மும்பை மற்றும் வதோதராவில் நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்தப் போட்டி இலங்கையில் நடைபெற இருந்த நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் நிா்வாக சீரிகேடு, அதில் அரசின் தலையீடு காரணமாக, போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து ஐசிசி அண்மையில் திரும்பப் பெற்றது. தற்போது அது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த வாய்ப்புக்கான பரிசீலனையில் வங்கதேசம், இந்தியா, தென்னாப்பிரிக்கா இருந்த நிலையில், உரிய மதிப்பீட்டின் அடிப்படையில் அது இந்தியாவுக்கு வழங்கப்பட்டதாகவும், இதற்கான முடிவு புதன்கிழமை நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்தது.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் டாப் 2 அணிகள் நேரடியாக இறுதி ஆட்டத்தில் மோதும்.

கடந்த ஆண்டு மகளிா் உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்திய நிலையில், அதில் இந்திய மகளிா் அணி வென்று முதல்முறையாக சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments