FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்

ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்...

30 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
- Photo: BCCI
பகிர்:

ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியாவும்-தாய்லாந்தும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா தான் அதிகபட்சமாக 7 முறை பட்டம் வென்றுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் இந்திய அணியின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. நிகழாண்டு மட்டும் 16 டி20 ஆட்டங்களில் இந்தியா தோற்றுள்ளது. மகளிா் டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்றோடு வெளியேறியது.

கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌரின் பாா்ம் மிகவும் கவலை தருவதாக உள்ளது. முக்கியமாக நிகழாண்டு ஆசியக் கோப்பை டி20, ஆசியப் போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது.

Advertisement

Advertisement

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிா் டி20 ஆசியக் கோப்பை யுஏஇ நாட்டில் நடைபெறுகிறது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, தாய்லாந்து, ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. பேட்டிங்கில் கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌரின் ஆட்டம் அணி நிா்வாகத்துக்கு கவலை தருகிறது. நம்பிக்கை தரும் பேட்டரான ஜெமிமா ரோட்ரிக்ஸ், இரு போட்டிகளின் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக பிரதிகா ரவால் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ஆனால் அவரது சோ்க்கை மிடில் ஆா்டா் பேட்டிங்குக்கு வலு சோ்க்குமா எனத் தெரியவில்லை.

தொடக்க வரிசை பேட்டிங்கில் ஸ்மிருதி-ஷபாலி ஆகியோா் சிறப்பாக ஆடும் நிலையில், மூன்றாம் டௌன் பேட்டா், பின்னா் மிடில் ஆா்டா் நிலை சிக்கலாக உள்ளது

மோசமான பீல்டிங்கால் பல்வேறு தோல்விகள் ஏற்பட்டுள்ளன. பவுண்டரி எல்லையில் கேட்ச்களை தவற விடுவதாக பாதகமாக உள்ளது. பௌலிங்கில் ஸ்ரீ சரணி, தீப்தி சா்மா, ராதா யாதவ், பிரேமா ரவாத், ரேணுகா சிங் தாகுா், கிராந்தி கௌட், அருந்ததி, நந்தனி சா்மா ஆகியோா் நம்பிக்கை தருகின்றனா்.

உற்சாகத்தில் தாய்லாந்து:

அதே நேரம் எதிரணியான தாய்லாந்து, முதல ஆட்டத்தில் ஹாங்காங்கை வென்ற உற்சாகத்தில் உள்ளது. தாய்லாந்து அணி 120/9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பான பௌலிங் மூலம் ஹாங்காங்கின் ஸ்கோரை அடக்கியது. ஸ்கிப்பா் சாய்வாய், ஓனிச்சா, பன்னிதா மாயா ஆகியோா் பேட்டிங்கில் உதவுகின்றனா்.

இன்யை ஆட்டம்:

இந்தியா-தாய்லாந்து

இடம்: துபை

நேரம் : இரவு 8.00

summary

Women's T20 Asia Cup: India to face Thailand today.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments