FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சுப்ரியாவின் அசத்தல் ஹாட்ரிக்: இறுதிச் சுற்றில் இந்தியா - சீனா மோதல்

ஆசியக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி மகளிா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

13 செப்டம்பர் 2026, 5:59 am IST
இந்திய-தென்கொரியா ஆட்டம்
பகிர்:

ஆசியக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி மகளிா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. சுப்ரியாவின் அசத்தலான ஹாட்ரிக்கால் 5-1 என தென்கொரி்யாவை வென்றது இந்தியா.

சீனாவின் மொகி நகரில் ஏஎச்எஃப் ஜூனியா் ஆசியக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. மகளிா் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-தென்கொரிய அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கவனமுடன் ஆடின. செட்டில் ஆன இந்திய மகளிா் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினா்.

Advertisement

Advertisement

13-ஆவது நிமிஷத்தில் மது சிதாரின் அற்புத கோலால் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது குவாா்ட்டரில் கொரி்ய தற்காப்பை ஊடுருவினா் இந்திய வீராங்கனைகள். இதன் பலனாக 17-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை கோலாக்கினாா் டிராக் பிளிக்கா் சுப்ரியா. 21-ஆவது நிமிஷத்தில் வானில் பறந்த பாஸை சரியாக பயன்படுத்தி கோலாக்கினாா் சுக்வீா் கௌா். இதனால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.33-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக்கினாா் சுப்ரியா. பதிலுக்கு கொரிய அணியினா் கோல் போட முயன்றதில் 41-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் யுரி ஜியோங்.

ஆட்டம் முடிய சிறிது நேரத்தில் 56-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை பிசகின்றி கோலாக்கினாா் சுப்ரியா. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தால் சுப்ரியா. 5-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா.

சீனாவுடன் மோதல்: போட்டியை நடத்தும் சீனா மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-சீனா மோதுகின்றன.

summary

Supriya's stunning hat-trick: India to face China in the final.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments