FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே நிமிஷத்தில் ஒலிஸேவுக்கு 2 யெல்லோ கார்டு..! பயர்ன் மியூனிக் அணிக்கு அதிர்ச்சி அளித்த வைக்கிங்!

சாம்பியன்ஸ் லீக்கில் மைக்கேல் ஒலிஸேவுக்கு முதல் ரெட் கார்டு வழங்கப்பட்டது குறித்து...

14 அக்டோபர் 2026, 5:37 pm IST
மைக்கேல் ஒலிஸேவுக்கு ரெட் கார்டு - படம்: ஏபி
பகிர்:

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் - வைக்கிங் ஆகிய அணிகள் போட்டி நள்ளிரவு நடைபெற்றது. இதில் 3-3 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் மைக்கேல் ஒலிஸேவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. ஒலிஸேவின் கால்பந்து வரலாற்றில் இதுதான் முதல் ரெட் கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் வைக்கிங் 2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது. பின்னர் 38ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது.

Advertisement

Advertisement

இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த பயர்ன் மியூனிக் 54, 60ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் கோல் அடித்தார். 71ஆவது நிமிஷத்தில் லூயிஸ் டைஸ் கோல் அடித்து 3-2 என முன்னிலைப் பெற வைத்தார்.

பின்னர், 74ஆவது நிமிஷத்தில் மைக்கேல் ஒலிஸேவுக்கு ஃபௌல் செய்த காரணத்தினால் முதல் யெல்லோ கார்டு கொடுக்கப்பட்டது. பின்னர், அவர் பந்தை எதிரணி கேப்டன் முகத்தின் மீது வீசியதால் அதே நிமிஷத்தில் மற்றுமொரு யொல்லோ கார்டு அளிக்கப்பட்டது. இரண்டு யெல்லோ கார்டு ரெட் கார்டாக மாறியது.

மைக்கேல் ஒலிஸேவின் சீனியர் கால்பந்து வாழ்க்கையில் இதுதான் முதல் ரெட் கார்டு என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், பயர்ன் மியூனிக் அணி 10 பேருடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

இறுதியில் 90ஆவது நிமிஷத்தில் வைக்கிங் அணியின் ஹெர்மன் ஹுயூகன் கோல் அடித்து 3-3 என சமன்படுத்தினார். இந்த சமனுடன் பயர்ன் மியூனிக் அணி நான்காவது இடத்தில் இருக்கிறது.

எளிதாக வெற்றி பெறுமென இருந்த பயர்ன் மியூனிக் அணிக்கு வைக்கிங் அதிர்ச்சி அளித்தது. இந்த அணி புள்ளிப் பட்டியலில் 26ஆவது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.

summary

Bayern munich held by Viking after Micheal Olise sees red in Champions League

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments