முகப்பு

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணிக்கு அதிர்ச்சி அளித்த எல்ஒஎஸ்சி!

சாம்பியன்ஸ் லீக்கில் லில் எல்ஒஎஸ்சி அணி பயர்ன் மியூனிக்கை வீழ்த்தியது குறித்து...

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணிக்கு அதிர்ச்சி அளித்த எல்ஒஎஸ்சி!
வெற்றிக் களிப்பில் லில் எல்ஒஎஸ்சி அணியினர் - படம்: ஏபி
பகிர்:

ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் லில் எல்ஒஎஸ்சி அணி ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பயர்ன் மியூனிக்கை வீழ்த்தி, அதிர்ச்சி அளித்தது.

வடக்கு பிரான்ஸ் அணியான லில் ஒலிம்பிக் ஸ்போர்டிங் கிளப் (லில் எல்ஓஎஸ்சி) தனது சொந்த மண்ணில் பயர்ன் மியூனிக் உடன் இன்று அதிகாலை மோதியது.

இந்தப் போட்டியில் பயர்ன் மியூனிக் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது. ஆட்டத்தின் 15ஆவது நிமிஷத்தில் பயர்ன் மியூனிக் வீரர் உபமேகனோ கோல் அடித்தார். முதல் பாதியில் 1-0 என மியூனிக் முன்னிலை வகித்தது.

Advertisement

Advertisement

இரண்டாம் பாதியில் லில் அணி சார்பில் 62ஆவது நிமிஷத்தில் அயசே உயேடா கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், 65ஆவது நிமிஷத்தில் மியூனிக் வீரர் அலெக்சாண்டர் பவோல்விச் ஓன் கோல் அடித்தார்.

இறுதியில் லில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் 65 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த பயர்ன் மியூனிக் 10 ஷாட்டுகளில் 6 முறை இலக்கை நோக்கி அடித்தது.

லில் அணி 11 ஷாட்டுகளில் 3 முறை இலக்கை நோக்கி அடித்தது. 16 டேக்கள்ஸ், 29 க்ளயரன்ஸ் என தடுப்பாட்டத்தில் லில் அணி பயர்ன் மியூனிக்கைவிட சிறப்பாக விளையாடியது.

நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் லில் அணிக்கு இதுதான் முதல் வெற்றி என்பதும் நினைவுக்கூரத்தக்கது. புள்ளிப் பட்டியலில் இந்த அணி 29ஆவது இடத்திலும் பயர்ன் மியூனிக் அணி 15ஆவது இடத்திலும் இருக்கின்றன.

summary

Lille LOSC stun Bayern Munich in the Champions League!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.