முகப்பு

ஓய்வை அறிவித்த மோட்டோஜிபி லெஜண்ட் மார்க் மார்க்வெஸ்..! உச்சத்திலேயே வெளியேற்றம்!

பிரபல மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மார்க் மார்க்வெஸ் தனது ஓய்வை அறிவித்தது குறித்து...

23 வினாடிகள் முன்பு
ஓய்வை அறிவித்த மோட்டோஜிபி லெஜண்ட் மார்க் மார்க்வெஸ்..! உச்சத்திலேயே வெளியேற்றம்!
8ஆவது மோட்டோஜிபி பதக்கத்துடன் மார்க் மார்க்வெஸ் - படங்கள்: மோடோஜிபி, ஏபி
பகிர்:

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மார்க் மார்க்வெஸ் (33 வயது) மோடோஜிபி தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மோட்டோஜிபியில் எட்டாவது முறையாக உலக சாம்பியனாகி சாதனை படைத்திருந்தார். இதுவரை மோட்டோஜிபி வரலாற்றில் இருவர் மட்டுமே 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த ஜியாகோமோ அகோஸ்டினி (1963 - 1977) முதல்முறையாக 8 முறை மோட்டோஜிபியில் சாம்பியனாகி இருந்தார். இந்த சாதனையை சமீபத்தில் மார்க்வெஸ் சமன்படுத்தினார்.

Advertisement

Advertisement

இந்த விருது வழங்கும் விழாவில் ஜியாகோமோ அகோஸ்டினி வந்திருந்ததும் நினைவுகூரத்தக்கது. மார்க்வெஸ் 2013, 2014, 2016, 2017, 2018, 2019, 2025, 2026 ஆகிய சீசன்களில் வென்றுள்ளார். மொத்தமாக, மார்க் மார்க்வெஸ் 10 கிராண்ட் பிரிக்ஸ் உலக சாம்பியன்ஷிப்புகளை வென்றுள்ளார்.

இந்த சீசனின் கடைசி போட்டியான வலென்சியாவுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் நவ.27 - 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

மார்க் மார்க்வெஸ் தொடக்கத்தில் ஹோண்டா நிறுவனத்தில் 2013- 2023 வரை இருந்தார். பின்னர், 2024 முதல் டுகாட்டி நிறுவனத்திற்காக ஓட்டி வந்தார்.

கடந்த 2025ல் ஐந்தாண்டுகளாக கோப்பை வெல்லாத குறையைத் தீர்த்து அசத்தினார். அதே வேகத்தில் 2026 சீசனிலும் 8ஆவது பீர்மியர் கிளாஸ் சாம்பியன்ஷிப் வென்று அசத்தினார்.

மார்க்வெஸ் 2013ல் தனது முதல் மோடோஜிபி பட்டத்தை வென்றார். அன்றிலிருது 13 ஆண்டுகள் அல்லது 4,760 நாள்கள் பந்தயங்களில் பங்கேற்று 80 பிரீமியர் கிளாஸ் வெற்றிகளையும் 10 உலக சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார்.

தனது உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். 2027 சீசனில் டுகாட்டி அணிக்காக பெட்ரோ அகோஸ்டா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெறுவது ஏன் என மார்க்வெஸ் விரிவாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். காயங்களினால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடுமென வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.

summary

World Champion Marc Marquez To Retire From MotoGP At End of 2026 Season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.