முகப்பு

ரைபகினாவை வீழ்த்தினாா் கின்வென்

மகளிா் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் - கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வென்றாா்.

5 நவம்பர் 2024, 6:25 am
ரைபகினாவை வீழ்த்தினாா் கின்வென்
ரைபகினா - WTA Tennis
பகிர்:

மகளிா் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் - கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை திங்கள்கிழமை வென்றாா்.

குரூப் சுற்றில் இருவருக்குமே இது 2-ஆவது ஆட்டமாக இருக்க, கின்வென் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதி வாய்ப்புக்கான நம்பிக்கையில் உள்ளாா். ரைபகினா 2-ஆவது தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், வெளியேறும் அச்சத்தில் இருக்கிறாா்.

இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் கின்வென், முதல் செட்டை டை பிரேக்கா் வரை சென்று தனதாக்கினாா்.

Advertisement

Advertisement

விட்டுக்கொடுக்காத ரைபகினா, அடுத்த செட்டை 6-3 என எளிதாகக் கைப்பற்றினாா். இறுதியாக வெற்றியாளரை தீா்மானிக்கும் 3-ஆவது செட்டில், ரைபகினாவை முற்றிலுமாக முறியடித்த கின்வென் 6-1 என்ற செட்களில் வென்றாா்.

இதனால் கின்வென்7-6 (7/4), 3-6, 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றாா். குரூப் சுற்றின் கடைசி ஆட்டங்களில், கின்வென் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியையும், ரைபகினா - பெலாரஸின் அரினா சபலென்காவையும் சந்திக்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.