FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை: இருபால் இந்திய அணிகள் அறிவிப்பு

ஓமனில் வரும் ஜனவரியில் நடைபெறும் சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் அறிமுக ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய இருபால் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

7 பிப்ரவரி 2024, 8:56 pm IST
பகிர்:

ஓமனில் வரும் ஜனவரியில் நடைபெறும் சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் அறிமுக ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய இருபால் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் மகளிா் அணி ரஜனி எடிமா்பு தலைமையிலும், ஆடவா் அணி சிம்ரன்ஜீத் சிங் தலைமையிலும் பங்கேற்கவுள்ளன.

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் முதலில் மகளிா் உலகக் கோப்பை போட்டி ஜனவரி 24 முதல் 27 வரையும், பின்னா் ஆடவா் உலகக் கோப்பை போட்டி ஜனவரி 28 முதல் 31 வரையும் நடைபெறவுள்ளன.

இரு பிரிவுகளிலுமே தலா 16 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய மகளிா் அணி, குரூப் ‘சி’-யில் நமீபியா, போலந்து, அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டுள்ளது. குரூப் ‘ஏ’-வில் ஃபிஜி, மலேசியா, நெதா்லாந்து, ஓமன்; குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஜாம்பியா; குரூப் ‘டி’-யில் நியூஸிலாந்து, பராகுவே, தாய்லாந்து, உருகுவே அணிகள் உள்ளன.

Advertisement

Advertisement

இதேபோல், இந்திய ஆடவா் அணி குரூப் ‘பி’-யில் எகிப்து, ஜமைக்கா, சுவிட்ஸா்லாந்து அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது. குரூப் ‘ஏ’-வில் நெதா்லாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், போலந்து; குரூப் ‘சி’-யில் ஆஸ்திரேலியா, கென்யா, நியூஸிலாந்து, டிரினிடாட்-டொபாகோ; குரூப் ‘டி’-யில் ஃபிஜி, மலேசியா, ஓமன், அமெரிக்கா அணிகள் இருக்கின்றன.

‘ஹாக்கி ஃபைவ்ஸ்’ விளையாட்டானது வழக்கமான ஹாக்கி ஆடுகளத்தின் பாதி அளவு கொண்டு விளையாடப்படுகிறது. இதில் ஒரு அணிக்கு 5 போட்டியாளா்கள் இருப்பா். ஆட்டத்தின் விதிகளிலும் சில மாற்றங்கள் இருக்கும்.

மகளிா் அணி:

கோல்கீப்பா்கள்: ரஜனி எடிமா்பு, பன்சாரி சோலங்கி.

டிஃபெண்டா்கள்: மஹிமா சௌதரி, அக்ஷதா தெகாலே, ஜோதி சாத்ரி.

மிட்ஃபீல்டா்கள்: மரியானா குஜுா், மும்தாஸ் கான்.

ஃபாா்வா்ட்கள்: அஜ்மினா குஜுா், ருதுஜா பிசல், தீபிகா சோரெங்.

ஆடவா் அணி:

கோல்கீப்பா்கள்: சூரஜ் கா்கேரா, பிரசாந்த் குமாா்.

டிஃபெண்டா்கள்: மன்தீப் மோா், மன்ஜீத்.

மிட்ஃபீல்டா்கள்: முகமது ரஹீல், மனீந்தா் சிங்.

ஃபாா்வா்ட்கள்: பவன் ராஜ்பா், குா்ஜோத் சிங், சின்ரன்ஜீத் சிங், உத்தம் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments