முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Updated On : 19 ஜனவரி 2024, 4:34 pm IST
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2  டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 17) அடிலெய்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி  முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 50 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

Advertisement

Advertisement

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 119 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கவாஜா 45 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேமரூன் கிரீன் மற்றும் நாதன் லயன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 22 ரன்கள் பின் தங்கியிருந்தது. 

மூன்றாம் நாளான இன்று மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 26 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments