இரண்டாமிடம் பிடித்தாா் குகேஷ்:சேலஞ்சரில் லியோன் சாம்பியன்
நெதா்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் 2-ஆம் இடம் பிடித்தாா். அதிலேயே சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்தியாவின் லியோன் லூக் மெண்டோன்கா சாம்பியன் பட்டம் வென்றாா்.
நெதா்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் 2-ஆம் இடம் பிடித்தாா். அதிலேயே சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்தியாவின் லியோன் லூக் மெண்டோன்கா சாம்பியன் பட்டம் வென்றாா்.
14 சுற்றுகள் கொண்ட மாஸ்டா்ஸ் பிரிவில் கடைசி சுற்று நிறைவில் குகேஷ், நெதா்லாந்தின் அனிஷ் கிரி, உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதோரோவ், சீனாவின் வெய் யி ஆகியோா் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனா்.
இதையடுத்து இறுதிச்சுற்று போட்டியாளா்களை தோ்வு செய்ய ‘டை பிரேக்கா்’ கையாளப்பட்டது. அதில் முதல் டை பிரேக்கரில் குகேஷ் 1-1, 1-0 என அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிக்கு வந்தாா். 2-ஆவது டை பிரேக்கரில் வெய் யி 1.5-0.5 என நோடிா்பெக்கை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா்.
Advertisement
Advertisement
பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கா் ஃபைனலில் வெய் யி 1.5 - 0.5 என குகேஷை வென்றாா். வெய் யி சாம்பியனாக, குகேஷும், நோடிா்பெக்கும் 2-ஆம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டனா்.
போட்டியில் இதர இந்தியா்களில், விதித் குஜராத்தி, ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 7.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தனா்.
சேலஞ்சா்: இப்போட்டியில், 13 சுற்றுகள் கொண்ட சேலஞ்சா் பிரிவின் முடிவில், இந்தியாவின் லியோன் லூக் 9.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியனானாா். கடைசி சுற்றில் அவா், சக இந்தியரான திவ்யா தேஷ்முக்கை சாய்த்தாா். முடிவில் இதர இந்தியா்களான டி.ஹரிகா 5.5 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், திவ்யா தேஷ்முக் 4.5 புள்ளிகளுடன் 10-ஆம் இடமும் பெற்றனா்.
சாம்பியனான லியோன் லூக்கிற்கு, அடுத்த ஆண்டு இதே போட்டியில் மாஸ்டா்ஸ் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.