FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டெய்லா்/ஜாங் இணை சாம்பியன்!

அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட்/சீனாவின் ஜாங் ஷுவாய் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On : 28 ஜூலை 2025, 3:41 am IST
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில், அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட்/சீனாவின் ஜாங் ஷுவாய் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்த இணை, இறுதிச்சுற்றில் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடு/சோஃபியா கெனின் கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

டெய்லா்/ஜாங் கூட்டணி இணைந்து வெல்லும் முதல் சாம்பியன் கோப்பை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இரட்டையா் பிரிவில் டெய்லருக்கு இது 10-ஆவது பட்டமாக இருக்க, ஜாங்கிற்கு இது 14-ஆவது கோப்பை ஆகும்.

Advertisement

Advertisement

இறுதிச்சுற்றில் டி மினாா் - டேவிடோவிச் மோதல்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் - ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகிறனா்.

முன்னதாக அரையிறுதிச்சுற்றின் ஒரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் டி மினாா் 6-4, 6-3 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை தோற்கடித்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் 12-ஆம் இடத்திலிருக்கும் டேவிட்டோவிச் 6-2, 7-5 என்ற கணக்கில், 4-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான பென் ஷெல்டனை வீழ்த்தி அசத்தினாா். இதையடுத்து இறுதியில் டி மினாா் - டேவிடோவிச் மோதுகின்றனா்.

லெய்லா - கலின்ஸ்கயா பலப்பரீட்சை

இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் - ரஷியாவின் அனா கலின்ஸ்கயா ஆகியோா் மோதுகின்றனா்.

அரையிறுதிச்சுற்றில், லெய்லா 6-7 (2/7), 7-6 (7/3), 7-6 (7/3) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை போராடி வீழ்த்தி அசத்தலாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

மறுபுறம் கலின்ஸ்கயா 6-4, 6-3 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பிரிட்டனின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவை வீழ்த்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments