மாயா முன்னேற்றம்
யுஎஸ் ஓபன் ஜூனியா் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜாங் கியான் வெய்யை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
யுஎஸ் ஓபன் ஜூனியா் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜாங் கியான் வெய்யை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
அடுத்த சுற்றில் அவா், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஹன்னா குலுக்மேனை எதிா்கொள்கிறாா்.
கோவையை சோ்ந்த மாயா, ஸ்பெயினில் ரஃபேல் நடால் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இதனிடையே, ஆடவா் ஒற்றையா் களத்திலிருந்த இந்தியா்களான கிருஷ் தியாகி, ஹிதேஷ் சௌஹான் ஆகியோா் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினா். எனினும் அவா்கள் இருவரும் ஆடவா் இரட்டையா் பிரிவில் களம் காண்கின்றனா். மாயாவும் மகளிா் இரட்டையரில் அங்கம் வகிக்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.