FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பயிற்சியாளர் குறித்து...

Updated On : 14 ஏப்ரல் 2026, 4:35 pm IST
மேரி - லூயிஸ் ஈட்டா. - படம்: எக்ஸ் / எஃப்சி யுனியன்.
பகிர்:

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பெண் பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பாவில் ஆடவருக்கான டாப் 5 லீக்கில் முதல்முறையாக ஜெர்மனியின் புன்டெஸ்லீகா லீக்கில் இந்த வரலாறு நிகழ்த்தப்பட்டுள்ளது.

புன்டெஸ்லீகா லீக்கில் யுனியன் பெர்லின் அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக மேரி - லூயிஸ் ஈட்டா (34 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை கடந்த 2023ல் முதல்முறையாக துணைப் பயிற்சியாளராக அறிமுகமாகி சாதனை படைத்தார். பிரீமியர் லீக், லா லிகா, சீரிஸ் ஏ, லீக் 1, புன்டெஸ்லீகா ஆகிய டாப் 5 ஐரோப்பிய லீக்கில் மேரி-லூயிஸ் ஈட்டாதான் முதல்முறையாக துணைப் பயிற்சியாளராகவும் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

அடுத்த சீசனில் மகளிர் யுனியன் பெர்லின் அணிக்கு பயிற்சியாளராக பதவி வகிக்க இருக்கிறார். அதற்கு முன்னதாக, ஆடவர் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார்.

5 போட்டிகள் மீதமுள்ள நிலையில், ரிலிகேஷன் நிலைக்கு தள்ளப்படாமல் காப்பாற்ற அணிக்கு உழைப்பதாகக் கூறியுள்ளார்.

summary

Marie-Louise Eta becomes first female head coach in men's top five European leagues at Bundesliga side Union Berlin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments