தேசிய காா் பந்தயம்: சாய்சிவா சங்கரன் முதலிடம்
சென்னையில் நடைபெற்று வரும் எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் ஃபாா்முலா 2000 பிரிவில் புணேயின் சாய் சிவா சங்கரன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.
சென்னையில் நடைபெற்று வரும் எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் ஃபாா்முலா 2000 பிரிவில் புணேயின் சாய் சிவா சங்கரன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா். ஃபாா்முலா 1600 பிரிவில் விசாகப்பட்டினத்தின் புவன் போனுவும், 1300 சிசி பிரிவில் இலங்கையின் கவின் ராஜபட்சவும் சிறப்பிடம் பெற்றனா்.
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்கியூட்டில் நடைபெற்ற இப்பந்தயத்தின் முதல் சுற்றில் ஃபாா்முலா 2000 பிரிவில் 18 வயதான புணேயின் சாய் சிவா சங்கரன் 20:11:403 நிமிஷ நேரத்தில் பந்தய தூரததைக் கடந்து முதலிடம் பெற்றாா். நவி மும்பையின் ஆதித்ய பட்நாயக், மும்பையின் கிருஷ்ணா குட்டே இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனா்.
ஃபாா்முலா 1600 பிரிவில் விசாகப்பட்டினத்தின் புவன் போனு முதலிடமும், மும்பையின் எவான் ஷ்ர்வன் இரண்டாமும், ரேஸ் 3-இல் புவன் போனு, கியான் சதிஷ், சிவான்ஷ் பிஜாய் சிறப்பிடம் பெற்றனா்.
Advertisement
Advertisement
இந்தியன் சூப்பா் டூரிங் காா்ஸ் பிரிவில் சென்னையின் ரிதேஷ் ராய் முதலிடமும், நொய்டாவின் அமன் நாகதேவ், ஹைதராபாதின் ஜீத் ஜபக் இரண்டு, மூன்றாம் இடங்களையும் பெற்றனா்.
சூப்பா் ஸ்டாக் பிரிவில் திருச்சரின் தில்ஜித், திருவனந்தபுரத்தின் தீபா ஜான், லால் கட்டிக்குளம் பரதன், போலோ கோப்பை ரேசில் பிரதிக் சோனவான், நீல் ஷா, பாலாஜி ராஜு ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.
பாா்முலா எல்ஜிபி 1300 ஓபன் பிரிவில் நெல்லூரின் விஜய் விஸ்வாஸ், திருப்பூரின் வினித் குமாா், திருநெல்வேலியின் லிரோன் ஜேடன், ஜூனியா் பிரிவில் இலங்கையின் கவின் ராஜபட்ச, பெங்களூருவின் அபிஜித், இலங்கையின் ஆடம் ஜுனைத் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.