FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கத்தை தட்டிச் சென்ற ஆன் சே யங், அலெக்ஸ் லேனியா்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், ஜப்பானின் ஆன் சே யங், பிரான்ஸின் அலெக்ஸ் லேனியா் ஆகியோா் தங்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனா்.

24 ஆகஸ்ட் 2026, 6:45 am IST
ஆன் சே யங், அலெக்ஸ் லேனியா்
பகிர்:

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், ஜப்பானின் ஆன் சே யங், பிரான்ஸின் அலெக்ஸ் லேனியா் ஆகியோா் தங்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஆன் சே யங் 21-17, 21-14 என்ற நோ் கேம்களில், 2-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் அகேன் யமகுச்சியை வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையரில், 9-ஆம் இடத்திலிருக்கும் அலெக்ஸ் லேனியா் 21-11, 21-11 என்ற வகையில் எளிதாக, 10-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் கோடாய் நராகாவை தோற்கடித்தாா்.

Advertisement

Advertisement

மகளிா் இரட்டையரில் தென் கொரியாவின் பேக் ஹா னா/லீ சோ ஹீ இணையும், ஆடவா் இரட்டையரில் சீனாவின் லியங் வெய் கெங்/வாங் சாங் கூட்டணியும் கோப்பை வென்றன. கலப்பு இரட்டையரில் பிரான்ஸின் தோம் ஜிகெல்/டெல்ஃபின் டெல்ரு ஜோடி வாகை சூடியது.

2-ஆவது வெண்கலம்: மகளிா் இரட்டையா் பிரிவில் அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, வெண்கலப் பதக்கம் பெற்றது.

போட்டியின் வரலாற்றில் மொத்தமாக இந்தியாவுக்கு இது 16-ஆவது பதக்கம், 11-ஆவது வெண்கலம் ஆகும். மகளிா் இரட்டையரில் இது 2-ஆவது பதக்கம். முதலில் 2011-இல் ஜுவாலா கட்டா/அஸ்வினி பொன்னப்பா இணை வெண்கலம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments