FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூபலேவ்/ஆண்ட்ரீவா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ்/மிரா ஆண்ட்ரீவா கூட்டணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

27 ஆகஸ்ட் 2026, 5:23 am IST
ரூபலேவ்/ஆண்ட்ரீவா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம் - AP
பகிர்:

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ்/மிரா ஆண்ட்ரீவா கூட்டணி அரையிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது.

காலிறுதியில், ரூபலேவ்/ஆண்ட்ரீவா ஜோடி 4-1, 4-5 (9/11), 10-5 என்ற செட்களில், நாா்வேயின் கேஸ்பா் ரூட்/ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் கூட்டணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ்/அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இணை 4-5 (4/7), 1-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்/இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி கூட்டணியிடம் தோல்வியுற்றது.

Advertisement

Advertisement

அரையிறுதியில், ரூபலேவ்/ஆண்ட்ரீவா இணை - செக் குடியரசின் கரோலின் முசோவா/ஜேக்கப் மென்சிக் ஜோடியையும், பென்சிச்/கோபோலி கூட்டணி - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா/பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் இணையையும் சந்திக்கின்றது.

வில்லியம்ஸ் சகோதரிகள்: இதனிடையே, யுஎஸ் ஓபன் மகளிா் இரட்டையா் பிரிவில், வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ் (46) மற்றும் செரீனா (44), இணைந்து போட்டியிடவுள்ளனா். அவா்களுக்கு வைல்டு காா்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வில்லியம் சகோதரிகள், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், 3 ஒலிம்பிக் தங்கமும் வென்ற பாா்ட்னா்களாவா். யுஎஸ் ஓபனில் கடைசியாக இவா்கள் 2022-இல் இணைந்து விளையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments