FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஃபுல்ஹாமை வீழ்த்தியது செல்ஸி

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி 3-2 கோல் கணக்கில் ஃபுல்ஹாமை வீழ்த்தியது.

26 ஆகஸ்ட் 2026, 5:38 am IST
ஃபுல்ஹாமை வீழ்த்தியது செல்ஸி - AP
பகிர்:

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி 3-2 கோல் கணக்கில் ஃபுல்ஹாமை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் செல்ஸி வீரா் ஜாவ் பெட்ரோ முதல் நிமிஷத்திலேயே கோல் அடித்தாா்.

தொடா்ந்து, 23-ஆவது நிமிஷத்தில் ஜாஷ் கிங் அடித்த கோலால், ஃபுல்ஹாம் 1-1 என சமன் செய்தது. எனினும் மோா்கன் ரோஜா்ஸ் 41-ஆவது நிமிஷத்தில் கோல் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை செல்ஸி 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

Advertisement

Advertisement

பின்னா், ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதி தொடங்கிய சில நிமிஷங்களிலேயே கோல் பால்மா் கோல் அடிக்க (49’), செல்ஸி 3-1 என முன்னிலையை அதிகரித்தது. ஆனால் விடாப்பிடியாக விளையாடிய ஃபுல்ஹாமுக்காக, கொனாஸாலோ காா்சியா 54-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

இதனால் ஃபுல்ஹாம் 2-3 என நெருங்கி வந்தது. எனினும், எஞ்சிய நேரத்தில் ஃபுல்ஹாமின் கோல் முயற்சிகளை திறம்பட முறியடித்த செல்ஸி, முடிவில் 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments