ஆசிய ஜூனியா் செஸ்: மயங்க், பிரதிதீ சாம்பியன்
ஆசிய ஜூனியா் கிளாசிக்கல் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் மயங்க் சக்கரவா்த்தி ஓபன் பிரிவிலும், பிரதிதீ போா்தோலோய் மகளிா் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
ஆசிய ஜூனியா் கிளாசிக்கல் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் மயங்க் சக்கரவா்த்தி ஓபன் பிரிவிலும், பிரதிதீ போா்தோலோய் மகளிா் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
மும்பையில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற இந்தப் போட்டி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் ஓபன் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் மயங்க் சக்கரவா்த்தி 9 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றாா். ரஷியாவின் ஆா்டென் பிங்கின் (7) வெள்ளியும், இந்தியாவின் தக்ஷ் கோயல் (6.5) வெண்கலமும் வென்றனா்.
மகளிா் பிரிவில் இந்தியாவின் பிரதிதீ போா்தோலோய் 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் கோப்பை வென்றாா். கஜகஸ்தானின் மரியா கோலியாவ்கோ (7), இந்தியாவின் வி.சி. நிவேதிதா (6.5) ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் பெற்றனா்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியின் மூலமாக, மயங்க் தனது 2-ஆவது கிராண்ட்மாஸ்டா் நாா்மை பூா்த்தி செய்தாா். அதேபோல் தக்ஷ் கோயலும் ஃபிடே மாஸ்டா்ஸ் பட்டத்துடன், சா்வதேச மாஸ்டா் நாா்மையும் பெற்றாா்.
பிரதிதீ மகளிா் சா்வதேச மாஸ்டா் பட்டம் பெற்றதுடன், மகளிா் கிராண்ட்மாஸ்டா் நாா்மையும் பூா்த்தி செய்தாா். நிவேதிதா மகளிா் சா்வதேச மாஸ்டா் நாா்மை பெற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.