FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

72 ஆண்டுகளுக்குப் பின் காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!

பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி கொலம்பியாவை வென்றது.

வெற்றியைக் கொண்டாடும் சுவிட்சர்லாந்து அணியினர் - AP
பகிர்:

பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி கொலம்பியாவை வென்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து - கொலம்பியா அணிகள் மோதின. வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

கொலம்பிய அணியின் ஆதிக்கத்துடன் தொடங்கிய போட்டியின் முதல் 45 நிமிடங்களில் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்தது அந்த அணி. இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்பு பலமுறை தவறியது.

Advertisement

Advertisement

தெளிவாக கோல் அடிக்கும் வாய்ப்புகள் அரிதாகவே அமைந்தன. கொலம்பியாவின் லூயிஸ் லூயிஸ் சுவாரஸ் அவ்வாறு கிடைத்த வாய்ப்பைத் இலக்கை மீறி அடித்து தவறவிட்டார். அதே போல, மறுமுனையில் சுவிஸ் அணியின் ஃபேபியன் ரைடர் அடித்த பந்தை கொலம்பிய கோல்கீப்பர் கமிலோ வர்காஸ் எளிதாகத் தடுத்தார். இரு அணிகளும் கோல் அடிப்பதில் போட்டி முழுவதும் தடுமாறினர். அந்தளவுக்கு எதிரணியை தடுப்பதில் சிறப்பான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.

90 நிமிடங்களுக்குப் பின் கூடுதல் நேரத்திற்கு சென்ற ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது. ஜான் லுகுமியின் தலையால் அடித்த பந்து கம்பத்தில் மோதி ​​கொலம்பியாவின் கோல் அடிக்கும் வாய்ப்பு நூலிழையில் தவறியது. சில நிமிடங்களில், கொலம்பிய வீரர் கிரானிட் ஷாகா அடித்த பந்தை இடைமறித்த ஜாமிண்டன் காம்பாஸ், தனக்குக் கிடைத்த ஒரு பொன்னான கோல் வாய்ப்பைத் தவறவிட்டார். 30 நிமிடங்களும் முடிந்தது.

போட்டி பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது. இதில், கொலம்பியாவின் ஜுவான் பெர்னாண்டோ குயின்டெரோ, ஜாமின்டன் காம்பாஸ், லூயிஸ் டயஸ் ஆகியோர் 5-ல் 3 பெனால்டி ஷூட் அவுட் கோல்களை அடித்தனர். 2 கோல்கள் மிஸ்ஸானது.

சுவிட்சர்லாந்து அணியின் கிரானிட் ஷகா, ஜெகி அம்டோனி , செட்ரிக் இட்டன் ஆகியோர் 3 கோல்கள் அடித்த நிலையில் அடுத்ததாக வந்த ரூபன் வர்காஸ் வெற்றிக்கான 4-வது கோலை அடித்தார்.

இதன்மூலம், 1954-க்குப் பிறகு கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

அடுத்ததாக, மற்றொரு போட்டியில் வென்ற அர்ஜெண்டினா அணியுடன் சுவிட்சர்லாந்து காலிறுதியில் மோதவுள்ளது.

summary

Switzerland qualifies for the quarter-finals after 72 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments