FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

66 ஆண்டுகளில் முதல்முறை..! நான்காம் தர அணியுடன் தோல்வியுற்ற பிரீமியர் லீக் சாம்பியன் ஆர்செனல்!

இஎஃப்எல் கோப்பையில் ஆர்செனல் அணியை வெளியேற்றிய ஃபிலீட்வுட் அணி குறித்து...

வெற்றிக் களிப்பில் ஃபிலீட்வுட் அணியினர் - AP
பகிர்:

பிரிட்டனில் நடைபெறும் இங்கிலீஷ் ஃபுட்பால் லீக்ஸ் கோப்பை (இஎஃப்எல்) இறுதிப் போட்டியில் ஆர்செனல் அணியை ஃபிலீட்வுட் அணி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி, தொடரில் இருந்து வெளியேற்றியது.

இஎஃப்எல் கோப்பைக்கான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் ஆர்செனல் அணியும் நான்காம் தர அணியான ஃபிலீட்வுட் அணியும் நேற்றிரவு மோதின.

இந்தப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதில் 21ஆவது நிமிஷத்தில் ஆரோன் கோல் அடிக்க, ஆர்செனல் அணி சார்பில் 50ஆவது நிமிஷத்தில் விக்டர் கையோக்கர்ஸால் கோல் அடித்து சமன்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது. இதில் ஃபிலீட்வுட் 5-3 என வென்றது. 66 ஆண்டுகால வரலாற்றில் இதுபோல ஒரு தோல்வியை பிரீமியர் லீக் சாம்பியன் அணிகள் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியைப் பார்க்க 5,3000 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் திடலில் குவிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஆர்செனல் அணியின் ப்ரூனோ குய்மரேஸ் அடித்த கோல் ஷூட் அவுட்டில் தடுக்கப்பட்டது. இதனால், ஆர்செனல் ரசிகர்கள் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

”மிகவும் வருத்தமான நாள்” என ஆர்செனல் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார். வென்ற அணியின் பயிற்சியாளர், “எங்கள் அணியின் வரலாற்றில் மிகப்பெரிய நாள்” எனக் கூறியுள்ளார்.

summary

Carabao Cup: Arsenal embarrassed in penalty-shootout loss to 4th-tier Fleetwood in English League Cup stunner

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments