முதல்வர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்... மிக்க மகிழ்ச்சி..! -ப.சிதம்பரம்
இரு மொழிகளையும் சரளமாகப் பேச வேண்டும், உச்சரிக்கை வேண்டும் என்பது என விருப்பம் எனது விருப்பம் என ப.சிதம்பரம் கூறியிப்பது குறித்து..
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழக முதல்வர் விஜய் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன்.
Advertisement
Advertisement
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி.
இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் எல்லோரும்... குறிப்பாக இளம் மாணவர்கள் ... தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளையும் சரளமாகப் பேசவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்
எல்லாப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை மற்றும் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
இரு மொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
Chief Minister Vijay speaks English fluently... Very happy! – P. Chidambaram
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.