FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!

குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து...

குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதல்வர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

குழந்தைகள் நாளான இன்று (நவ. 14) முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஆவார்.

“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவாஹர்லால் நேருவின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்!

வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

On the occasion of Children's Day today (Nov 14), Chief Minister Joseph Vijay has extended his greetings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments