FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோல்வி: பிரான்ஸில் வெடித்த கலவரம்!

உலகக்கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 11:57 am IST
பிரான்ஸில் வெடித்த கலவரம்
பகிர்:

உலகக்கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. ஸ்பெயின் - பிரான்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்றது.

கடந்த உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியில் தோற்று வெளியேறியது. ஸ்பெயின் அணியின் சிறப்பான தடுப்பாட்டம், பிரான்ஸ் அணியின் திட்டமிடலின் போதாமை போன்ற காரணங்களால் இந்தப் போட்டியில் பிரான்ஸ் தோற்றது.

Advertisement

Advertisement

பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பின்னர் அந்நாட்டின் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. தோல்வியால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனங்களைச் சேதப்படுத்தி, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.

பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் நகரிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். இதன்மூலம், அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிரான்ஸ் அணி அடுத்ததாக ஜூலை 18 அன்று மூன்றாம் இடத்துக்கு நடைபெறவுள்ள ப்ளே ஆஃப் போட்டிக்கு தயாராக வேண்டும். இதில், மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தோற்கும் அணியுடன் மோத வேண்டியிருக்கும்.

summary

Defeat in World Cup semi-final: Riots erupt in France!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments