முகப்பு
செய்திகள்

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

யு 18 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

Updated On : 6 ஜூன் 2026, 6:58 pm IST
பகிர்:

யு 18 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவா்  அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி திடலில் இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா, ஜப்பானை எதிர்கொண்டது.

இதில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜப்பான் சார்பில் 52 நிமிடத்தில் நுமடா ககு மட்டுமே பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். இது இந்தியா வெல்லும் மூன்றாவது சாம்பியன் கோப்பையாகும்.

Advertisement

Advertisement

லீக் சுற்றில் இந்தியாவை வீழ்த்தியிருந்த ஜப்பான் அணி, இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருந்தது. முன்னதாக நடந்த அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தானையும், ஜப்பான் மலேசியாவையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 லட்ச வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

summary

The Indian U-18 Men’s Hockey Team was crowned champion of the Men’s U-18 Asia Cup 2026 after defeating host Japan 4-1 in the final in Kakamigahara, Japan, on saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.